டெக்கானை வீழ்த்தியது சென்னை
>> Monday, May 2, 2011

ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 19 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ரெய்னா 35 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 59 ரன்கள் குவித்தார்.
அடுத்து களம் இறங்கிய டெக்கான் அணியின் தொடக்க வீரர்கள் சோஹல் - தவான் முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 71 ரன்கள் குவித்து அதிரடி தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.
சோஹல் 30 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன்பின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.
டெக்கான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் 28 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
தவான் 19 ரன்கள், சிப்லி, டுமினி தலா 17 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து சென்னை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 5வது வெற்றியாகும். அது மட்டுமின்றி சேப்பாக்கத்தில் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் சென்னைக்கே வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 8வது லீக்கில் ஆடிய டெக்கான் அணிக்கு இது 5வது தோல்வியாகும்.



0 comments:
Post a Comment